Appreciation ceremony for Manu Bhaker in Chennai

அண்மையில் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பில் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று இரட்டை வெண்கலப் பதக்கம் வென்றவர் மனு பாக்கர். இவர் வாங்கிய முதல் வெண்கல பதக்கமே இந்தாண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வாங்கிய முதல் பதக்கமாகும். இதனால் இவரைப் பல அரசியல் தலைவர்கள் நடிகர்கள் என அனைவரும் பாராட்டினர். அதைத்தொடர்ந்து அவர் தாயகம் திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

அந்த வகையில் இன்று சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் மனு பகார்க்கர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதைக் கௌரவிக்கும் வகையில், அவரை சிறந்த முறையில் வரவேற்றுப் பாராட்டினர். அதோடு மட்டுமில்லாமல் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை ரூ. 2,04,75,570 வழங்கினார்.

Advertisment

இத்தொகை சர்வதேச, இந்தியா மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த 642 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், இளம் விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதையும் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காகக் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை உயர்த்தும் நோக்கமாக இத்தொகை வேலம்மாள் பள்ளி சார்பாக வழங்கப்பட்டது. வீராங்கனை மனு பாக்கரின் பேச்சு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது.