gfhfhfgh

Advertisment

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் 26 வயதான அபூர்வி சண்டேலா வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வந்துள்ளனர். பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபூர்வி சண்டேலா 252.9 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இதற்கு முந்தைய சீன வீராங்கனையின் உலக சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். 26 வயதிலேயே உலக சாதனையுடன், உலககோப்பையையும் வென்ற அபூர்வி சண்டேலாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் டெல்லியில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்தால் கடந்த வாரம் பெரும் சர்ச்சை ஏற்பட்டதும், அதனை தொடர்ந்து ஒலிம்பிக் ஆணையம், இனி எந்த ஒலிம்பிக் தொடர்பான போட்டி தொடர்களையும் இந்தியாவில் நடத்த முடியாது என அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.