ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தஇந்தியஅணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில்இரண்டாம்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. காயங்கள், இனவெறித் தாக்குதல் எனப்பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியஅணி பெற்ற இந்தச் சாதனை வெற்றியைஇந்தியரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், வெற்றியோடு ஊர் திரும்பியஇந்திய வீரர்களுக்கு உற்சாகவரவேற்பும் அளிக்கப்பட்டது. மேலும், இந்தியஅணிக்கு, இந்திய கிரிக்கெட்வாரியம் ஐந்து கோடிபரிசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த டெஸ்ட்தொடரில்சிறப்பாக விளையாடிய ஆறு இளம் வீரர்களுக்கு கார்பரிசளிக்கப்போவதாக மஹிந்திராகுழுமத்தலைவர் ஆனந்த்மஹிந்திராதெரிவித்துள்ளார். இந்த கார்கள், நிறுவனத்தின் பணத்தில் அல்லாது தனது சொந்தப் பணத்தில் வழங்கப்படும் என்றும் ஆனந்த்மஹிந்திராதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர், "இந்தியாவின் எதிர்காலஇளைஞர்கள் கனவுகாணுவதையும், முடியாதவற்றை செய்து பார்ப்பதையும் சாத்தியமாக்கியுள்ளனர். அவர்களுடையது உண்மையான எழுச்சிக் கதைகள். தடைகளைத் தாண்டி சிறப்பான ஒன்றை எட்டியிருக்கிறார்கள்.இந்தப் பரிசுக்கான காரணம், இளைஞர்கள் தங்களை நம்பும்படியும்,குறைவானவர் பயணித்தபாதையைத் தேர்ந்தெடுங்கள் என அறிவுறுத்துவதே ஆகும்" வாழ்த்துகள் முகமது சிராஜ், ஷார்துல்தாக்கூர், சுப்மான்கில், நடராஜன், நவ்தீப்சைனி, வாஷிங்டன் சுந்தர்" எனத் தெரிவித்துள்ளார்.