அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலக கோப்பைக்கான இந்திய அணி கடந்த 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என இரு தமிழக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisment

ambati rayudu takes a dig at vijay shankar over icc worldcup squad

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இவர்கள் இருவரும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட என்ன காரணம் என்ன பிசிசிஐ விளக்கம் அளித்தது. அப்போது, தோனி காயமடைந்தால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்பவர் அதனை நன்கு செய்ய வேண்டும். முக்கியமான போட்டிகளில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும். எனவே தான் ரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisment

அதுபோல விஜய் சங்கர் தேர்வு பற்றி குறிப்பிடும்போது அவர் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்றும் சிறப்பாக செய்ய கூடிய 3 டைமென்ஷனல் (3d)பிளேயர் என கூறினார்.

இதனையடுத்து அணியில் தேர்வுசெய்யப்படாத அம்பதி ராயுடு, விஜய் சங்கரை மறைமுகமாக கலாய்க்கும் வகையில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், "எதிர்வரும் உலகக்கோப்பையை பார்க்க புதிதாக 3dகிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருவதோடு, அவர் அணியில் எடுக்கப்படாத விரக்தியில் இவ்வாறு பேசுகிறார் எனவும் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.