இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்டெஸ்ட்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' எனப் பெயர் இருப்பதைப்போல், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர், 'பார்டர்- காவஸ்கர்' கோப்பைதொடர் எனப் பெயருள்ளது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன்பார்டர்,இந்தியஜாம்பவான்கவாஸ்கர் ஆகிய இருவரையும்கவுரவிக்கும் விதமாக, இரு அணிகளும்மோதும் தொடருக்கு, அவர்களின்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒரு பேட்டியில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டரிடம், முதல் டெஸ்ட்போட்டியில்மயங்க்அகர்வாலோடு யார் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவேண்டும் எனக்கேட்கப்பட்டது. அதற்கு,ஆலன் பார்டர், சுப்மன்கில்லைதனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், அவர் தொடக்கஆட்டக்காரராக இறங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "நான் கடந்த சில நாட்களாக சிட்னியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்குஎதிராகஇந்தியஅணி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சுப்மன்கில்லால்ஈர்க்கப்பட்டுவிட்டேன். அவரதுநுட்பத்தில் எதோஒன்று இருக்கிறது. அவர் இளம்வீரர், அதனால்அவசரப்பட்டுசிலஷாட்களை ஆடுவார் எனஎனக்குத் தெரியும். ஆனால் அவர், உண்மையாகவே நல்ல வீரராகத் தெரிகிறார்" எனக் கூறியுள்ளார்