Advertisment

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதைத் தடுங்கள்... கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆலன் பார்டர் வேண்டுகோள்

Allan Border

ஐபிஎல் தொடரில்தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்பதை அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தடுக்க வேண்டும் என ஆஸி. அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்து ஆலன் பார்டர் கூறும் போது, "உள்ளூர் போட்டிகளை விட சர்வதேச போட்டிகளுக்குத்தான் அதிகம் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு நடப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை. 20 ஓவர் உலக கோப்பை நடைபெற முடியாதபோது, ஐபிஎல் தொடர் நடக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது பணம் சம்பாதிக்கும் செயல்மட்டுமே. நான் இதைக் கேள்வியெழுப்புவேன். கிரிக்கெட் வாரியங்கள் அவர்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதைத் தடுக்கவேண்டும். இது மாதிரியான உள்ளூர் போட்டிகளால் வரும் அச்சுறுத்தலில் இருந்து டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைப்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளின் கைகளில்தான் உள்ளது" எனக் கூறினார்.

Advertisment

IPL Allan Border
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe