Advertisment

ஆல் அவுட் ஆன இந்திய அணி; மழை பாதிப்பால் தொடரை வென்ற நியூசிலாந்து

All-out Indian team; Nz wins trophy in rain

Advertisment

நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. மூன்றாவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களையும் கேப்டன் தவான் 28 ரன்களையும் எடுத்தனர்.

சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் மிட்செல், மில்னே ஆகியோர் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். சௌதீ 2 விக்கெட்களையும் ஃபெர்குசன், சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் நிலையாக விளையாடினர்.ஃபின் ஆலன் 57 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே 38 ரன்களுடனும் வில்லியம்சன் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்த நிலையில்மழையால் ஆட்டம் ரத்தானது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe