Advertisment

இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடி; நியூசிலாந்து அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயிப்பு

All Indian batsmen in action; Himalaya target setting for New Zealand team

Advertisment

நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பர்க்கில் இன்று நடக்கிறது.

டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் பல இளம் வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக்தங்களது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியை இன்று விளையாடுகின்றனர். ஆக்லாந்தில் உள்ள ஈடன்பர்க்கில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisment

இந்திய அணியில் முதலில் களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் நிலையாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களைச் சேர்த்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வேகமாக ரன்களை சேர்க்க ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்த விக்கெட்களைக் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இதன் பின் வந்த சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியில் 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்களை இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது.

Newzealnd
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe