ALEX HALES

உலகம் முழுவதும் பிரபலமான ஐ.பி.எல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்துவீரர்கள், தங்கள் அணியோடு இணைந்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணிகள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அதிகமானசர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதால், அதற்குத் தயாராகும் விதமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்துஜோஷ் ஹேசல்வுட்டுக்குமாற்று வீரராகசென்னை அணி, இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸைஒப்பந்தம் செய்திருப்பதாக சமூகவலைதளங்களில்தகவல்கள் பரவின. இந்நிலையில் ஹேசல்வுட் விலகியது குறித்து, விளையாட்டு தொடர்பான இணையதளம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள சென்னை அணியின் தலைமைசெயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரரை இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், இனி வரும் காலத்தில், இதுகுறித்து முடிவெடுப்போம் எனவும்தெரிவித்துள்ளார்.