Advertisment

இங்கிலாந்து முன்னணி கிரிக்கெட் வீரருக்கு தீவிரமடைந்த கரோனா அறிகுறி... பீதியில் சக வீரர்கள்...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது,

Advertisment

alex hales corona symptoms

உலகம் முழுவதும் வேகமாகபரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகபரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்ட இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தனக்கு கரோனா அறிகுறிகள் தீவிரமடைந்துள்ளதாகதனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

nakkheeran app

பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்ற அவர், அரையிறுதி போட்டிக்கு முன்னரே, தனக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதன் காரணமாகதொடரிலிருந்து விலகிய அவர் மீண்டும் இங்கிலாந்து சென்றார். மேலும், அணி வீரர்களையும் தகுந்த மருத்துவ சோதனைகள் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த சூழலில், தனக்கு கரோனா அறிகுறிகள் தீவிரமடைந்துள்ளதாகதெரிவித்துள்ள அவர், அதிகப்படியான வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, வீட்டிலேயே தனிமையில் உள்ளதாகவும், இன்னும் ஒருசில தினங்களில் கரோனா சோதனையை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த தகவல், பி.எஸ்.எல். தொடரில் அவருடன் விளையாடிய வீரர்களுக்கு கரோனா குறித்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.

corona virus England
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe