Advertisment

"சேவாக் தலைமுடியும், என்னிடம் உள்ள பணமும்"... வைரலாகும் அக்தரின் கிண்டல் வீடியோ...

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேசிய வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் சேவாக்கை கிண்டலாக பேசும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் வெளியிட்டுள்ளார்.

Advertisment

akthars reply to sehwags viral video about money

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு வீடியோவில் பேசியிருந்த சேவாக், "சோயப் அக்தருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள அக்தர், "எனது நண்பர் சேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. ஒரு சாதாரண பையனான தான் நான் அப்போது பேசினேன் என்பது சேவாக்கிற்கு தெரியும். ஆனால், அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார்.பணத்தை கடவுள்தான் ஒருவருக்கு தருகிறார். இந்தியா அல்ல. சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட, என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.

Advertisment

akthar team india virender sehwag
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe