dhoni

Advertisment

தோனி ஐந்தாவது இடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோனி உள்ளிட்டமுன்னணி வீரர்களின் ஆட்டம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர், தோனி களமிறங்க வேண்டிய இடம் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "தோனி ஐந்தாம் இடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ களமிறங்க வேண்டும். இது முழுக்க முழுக்க அந்நேரத்தை பொறுத்தது. தோனி சூழலை முழுமையாக உள்வாங்கி விளையாட கூடியவர். அவரது ஆட்டமும் மேம்பட்டு வருகிறது" எனக் கூறினார்.