நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னை எம்,ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வழக்கம்போல கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

Advertisment

ajinkya rahane fined for taking too much time for bowling in ipl 2019 chennai super kings match

இந்த போட்டியின்போது, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டியில் தோல்வியைத் தழுவி சோகத்தில் உள்ள நிலையில் ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு அந்த அணி மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி அடுத்து ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.