ADVERTISEMENT

இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்!

01:18 PM Dec 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (03.12.2021) தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 150 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும், அக்ஸர் படேல் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

இதன்மூலம் அவர், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜே.சி. லேக்கர் என்ற இங்கிலாந்து வீரர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து இந்தியாவின் அனில் கும்ப்ளே, 1999இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT