AFGHANISTAN

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனால் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisment

இதற்கிடையே கடந்த இரண்டு போட்டிகளில் ஆடாத ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான முஜீப் உர் ரஹ்மான் அணிக்குத் திரும்பியுள்ளார். இது அந்த அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.