INDIA VS AFGHANISTAN

Advertisment

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது. இதில் தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களை தொடுமா எனச் சந்தேகம் எழுந்தது.

இருப்பினும் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பாக ஆடிய நஜிபுல்லா சத்ரன் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்களை குவித்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை 125 ரன்களை எடுக்கவிடாமல் சுருட்டுவார்களா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.