ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரருக்கு கரோனா!

12:43 PM Dec 05, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர், முஜீப் உர் ரஹ்மான். ஐ.பி.எல்-லில் இவர் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார். மேலும், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும், பிக்பாஷ் (Big Bash) தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட இருந்தார்.

ADVERTISEMENT

பிக்பாஷ் தொடரில் விளையாடுவதற்காக, கடந்த வாரம் தனது சொந்த ஊரான காபூலில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளார் முஜீப். வெளிநாட்டிலிருந்து வந்ததால், அங்கு ஒரு ஹோட்டலில் தனிப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதனைத்தொடர்ந்து, முஜீப்பிற்கு காரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு காரனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து முஜீப், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுவதுமாக குணமடையும் வரை, அவர் குயின்ஸ்லாந்தின் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருப்பார் என பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT