ADVERTISEMENT

அயர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆப்கானிஸ்தான் அணி..! இமாலய வெற்றியுடன் உலகக்கோப்பை பிரவேசம்...

04:57 PM May 22, 2019 | kirubahar@nakk…

வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து நாட்டுடன் 2 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆப்கான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து. அந்த அணியின் வீரர் முகமது ஷஜாத் அதிரடியாக விளையாடி 88 பந்துகளில் 101 ரன்களும், நஜ்புல்ல ஸத்ரான் 33 பந்துகளில் 60 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணி குல்பதின் நைபின் பந்துவீச்சில் நொறுங்கியது. நைபின் 9 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து அயர்லாந்து அணி 179 ரன்களை அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் உலககோப்பைக்கு முந்தைய போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த தெம்புடன் ஆப்கான் அணி உலகக்கோப்பையை எதிர்நோக்கி உள்ளது. இந்திய நிறுவனமான அமுல் நிறுவனம் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த உலககோப்பைக்கு ஸ்பான்சர் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT