Advertisment

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல் அடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்

har

Advertisment

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளைப்போல சமீபகாலமாக பெருமாளான இடங்களில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் வழியில் ஆப்கானிஸ்தானிலும் தற்போது பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதில் பால்க் லெஜண்ட்ஸ் எனும் அணியும் காபூல் ஸ்வானன் எனும் அணியும் மோதியது. இதில் காபூல் ஸ்வானன் அணியை சேர்ந்த ஹஸ்ரதுல்லா எனும் வீரர் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை விளாசி பன்னிரண்டு பந்துகளில் அரைசதம் அடித்து இதுவரை குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர்களான யுவராஜ் சிங் சாதனையையும் கிறிஸ் கெய்ல் சாதனையையும் சமன் செய்துள்ளார். குறிப்பாக இவர் விளையாடிய எதிர் அணியான பால்க் லெஜண்ட்ஸ் அணியில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Afganishtan chris gayle cricket
இதையும் படியுங்கள்
Subscribe