மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisment

adam gilchrist tweet about dhonis retirement and worldcup semifinal

இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisment

நேற்றைய போட்டி, உலகக்கோப்பையில் தோனியின் கடைசி ஆட்டமாக அமையும் என கணிக்கப்படும் நிலையில், தோனிக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அந்த ட்வீட்டில், "நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதுவரை நீங்கள் எங்களுக்கு கொடுத்த இவ்வளவு விளையாட்டுக்கும், நினைவுகளுக்கும் நன்றி. உங்களது அமைதியையும், தன்நம்பிக்கையையும் நான் எப்போதும் போற்றுவேன்" என பதிவிட்டுள்ளார். தோனி ரசிகர்கள் ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்து கவலையில் இருக்கும்போது, கில்கிறிஸ்ட் பதிவிட்டுள்ள இந்த ட்வீட் அவர்களை மேலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.