Advertisment

பேட்டிங்கில் 360 டிகிரி, ஃபில்டிங்கில் சூப்பர் மேன் -ஏ.பி. டிவில்லியர்ஸ் பிடித்த அற்புதமான கேட்ச் 

பேட்டிங்கில் நான் 360 டிகிரி என்றால், ஃபில்டிங்கில் நான் சூப்பர் மேன் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் நிரூபித்துள்ளார். 11வது ஐ.பி.எல் போட்டியின் 51 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி இருபது ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்களை இழந்தது.பெங்களூர் அணியின் சார்பாக ஏ.பி.டிவில்லியர்ஸ், மொயின் அலி, கொலின் கிராண்ட் ஹோம் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

Advertisment

a.b.de villiers amazing catch

அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்ஸும்இறங்கினர். தவான் 18 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். எட்டாவது ஓவரில்தான் அந்த அற்புதமான கேட்சை ஏ.பி. டி பிடித்தார். எட்டாவது ஓவரின் கடைசி பந்தை மொயின் அலி வீச அந்தபந்தைஹேல்ஸ் சிக்ஸ்க்கு அனுப்பினார். அனைவரும் சிக்ஸ் என்று நினைத்தபோது சூப்பர் மேனும், ஸ்பைடர் மேனும் இணைந்து ஓர் உடலுக்குள் புகுந்ததுபோல பறந்து கேட்ச் பிடித்தார் மிஸ்டர் 360. இந்த கேட்ச் அங்கிருந்த ரசிகர்களையும் இரு அணி வீரர்களையும் வாயைப்பிளக்க வைத்தது.இதுவரை நடைபெற்ற அனைத்துஐ.பி.எல் போட்டிகளிலும்பிடிக்கப்பட்டகேட்சுகளில் இது முதன்மையானது என்று புகழ்ந்து வருகின்றனர்.

Advertisment
a.b.devillers royal challengers bengallore SRH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe