Skip to main content

எனக்கே ஆச்சரியமாக இருந்தது -டிவில்லியர்ஸ் பேச்சு!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

AB de Villiers

 

13-ஆவது ஐ.பி.எல் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அணியின் இறுதிக்கட்ட  துரித ரன் சேகரிப்பிற்கு இது பெரிதும் உதவியது. 

 

வெற்றி குறித்தும், அவரது அதிரடியான ஆட்டம் குறித்தும் டிவில்லியர்ஸ் பேசுகையில், "நான் விளையாடிய விதம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் இங்கு வரும்போது நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் சிறிய சந்தேகம் இருந்தது. இங்கு வந்தபின் ஒரு அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடந்த நான்கு வாரங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். நல்ல தொடக்கம் கிடைத்தது. இறுதியில் ரன் அவுட் ஆனது எதிர்பாராதது. அணியின் வெற்றி மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

 

பெங்களூரு அணி தன்னுடைய அடுத்தப் போட்டியில் வரும் வியாழக்கிழமை பஞ்சாப் அணியுடன் மோதவிருக்கிறது.