Advertisment

கோமதி வரிசையில் ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த தமிழ் பெண்...

ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்த்தி அருண் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Advertisment

aarthi arun from tamilnadu won gold in asian weightlifting championship

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மருத்துவரான இவர் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் பல்மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பளுதூக்கும் போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த இவர்,கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதனையடுத்து ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் ஆர்த்தி அருண். வெற்றிக்கு பிறகு சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்த்தி அருண், தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் காமன்வெல்த் மற்றும் உலக பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

gomathi hong kong India Asian games
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe