Advertisment

அந்த மறக்கமுடியாத நிகழ்வு பெங்களூரில்தான் நிகழ்ந்தது... ஆர்.சி.பி. வீரர் ஆரோன் பின்ச்! 

Aaron Finch

Advertisment

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஆரோன் பின்ச், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தன்னுடைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதியது. அப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவ்வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் பெங்களூரு அணி வீரர்கள், இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். பெங்களூரு அணி வீரர் ஆரோன் பின்ச் பெங்களூரு அணி குறித்தும், பெங்களூர் குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர், "ஒவ்வொரு அணிக்கும் சில தனித்த பண்புகள் இருக்கும். ஏலத்தின்போது தொடங்கி இன்றுவரை அவர்கள் நல்ல முறையில் தொடர்பில் உள்ளனர். அணி தொடர்பாக நடக்கும் சிறிய விஷயங்களைக் கூட அனைத்து வீரர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்வார்கள். அணியை கட்டமைப்பதற்கான சில விஷயங்களில் நாங்கள் ஈடுபட்டோம். இது போன்ற ஒரு சிறந்த அணியில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

மேலும் பெங்களூர் குறித்துபேசும்போது, "பெங்களூர் எப்போதும் எனக்கு தனிச்சிறப்பு வாய்ப்பு இடம். என்னுடைய மனைவியிடம் என் காதலை இங்கு வைத்து தான் தெரியப்படுத்தினேன். இந்த முறை பெங்களூருவில் இருக்க முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. விரைவில் அனைவரும் அங்கு செல்வோம் என்று நினைக்கிறேன்" எனப் பேசினார்.

Aaron finch
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe