Skip to main content

அந்த மறக்கமுடியாத நிகழ்வு பெங்களூரில்தான் நிகழ்ந்தது... ஆர்.சி.பி. வீரர் ஆரோன் பின்ச்! 

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Aaron Finch

 

 

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஆரோன் பின்ச், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தன்னுடைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதியது. அப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவ்வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் பெங்களூரு அணி வீரர்கள், இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். பெங்களூரு அணி வீரர் ஆரோன் பின்ச் பெங்களூரு அணி குறித்தும், பெங்களூர்  குறித்தும் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "ஒவ்வொரு அணிக்கும் சில தனித்த பண்புகள் இருக்கும். ஏலத்தின்போது தொடங்கி இன்றுவரை அவர்கள் நல்ல முறையில் தொடர்பில் உள்ளனர். அணி தொடர்பாக நடக்கும் சிறிய விஷயங்களைக் கூட அனைத்து வீரர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்வார்கள். அணியை கட்டமைப்பதற்கான சில விஷயங்களில் நாங்கள் ஈடுபட்டோம். இது போன்ற ஒரு சிறந்த அணியில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

 

மேலும் பெங்களூர் குறித்து பேசும்போது, "பெங்களூர் எப்போதும் எனக்கு தனிச்சிறப்பு வாய்ப்பு இடம். என்னுடைய மனைவியிடம் என் காதலை இங்கு வைத்து தான் தெரியப்படுத்தினேன். இந்த முறை பெங்களூருவில் இருக்க முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. விரைவில் அனைவரும் அங்கு செல்வோம் என்று நினைக்கிறேன்" எனப் பேசினார்.

 

 

Next Story

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆரோன் பின்ச் பதிவுசெய்த சாதனை!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

Aaron Finch

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் குவிக்க, இந்திய அணி 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

 

துவக்க வீரரான ஆரோன் பின்ச் 124 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 114 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அவர் குவித்துள்ள மொத்த ரன்கள் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆரோன் பின்ச் இந்தச் சாதனையைத் தனது 126-ஆவது இன்னிங்ஸில் எட்டியதையடுத்து, குறைவான இன்னிங்ஸில் 5,000 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இச்சாதனையை 115 இன்னிங்ஸில் எட்டிய டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.
 

 

 

 

Next Story

"உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர்..." இந்திய வீரர் குறித்து ஆரோன் பின்ச் கருத்து!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Aaron Finch

 

உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர் என இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஆரான் பின்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடருக்காகத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

 

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் முழுமையாகப் பங்கெடுக்கவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்குப் பின் இந்தியா திரும்பவுள்ளார். இதனால், எஞ்சியுள்ள போட்டிகளை துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது.

 

ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆரோன் பின்ச், எதிர்வரவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான தொடர் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி குறித்துப் பேசுகையில், "விராட் கோலியின் சாதனைகளை எடுத்துப் பார்த்தால் அனைத்திலும் அது முதன்மையாக உள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்று. விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்பதே தொடர்ந்து எங்கள் நினைவில் நிறுத்த வேண்டியது என்று நினைக்கிறேன். அதிலிருந்து விலகிவிட்டால் அவருக்கு எதிரான யுக்திகளைத் தவறவிடுவோம். அவர் உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர். ஆகையால், சரியாகத் திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துவதில்தான் அனைத்தும் உள்ளது" எனக் கூறினார்.