Advertisment

இந்திய அணியின் 15 பேரில் 8 பேர் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்குகிறார்கள்

இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய அணியில் இருந்து மொத்தம் 8 வீரர்கள் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளார்கள். அதிலும் குறிப்பாக அணிக்கு வலு சேர்க்கும் ஆல் ரவுண்டர்கள் பகுதியில் மூன்று பேரும், விக்கெட்களை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய பௌலர்களில், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் ஒரு முக்கியமான மற்றும் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும் உள்ளனர்.

Advertisment

8 out of 15 Indian players are going to play their first World Cup series

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கோலி, தோனி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, விஜய் சங்கர், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இதில் கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப், பும்ரா, விஜய் சங்கர், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய எட்டு பேருக்கு இதுவே முதல் உலகக்கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த எட்டு பேரின் கடந்தகால ஒரு நாள் போட்டிகளின் பெர்ஃபார்மன்ஸ் குறித்து சிறு தகவல்கள்.

ஆல் ரவுண்டர்கள் விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா.

விஜய் சங்கர் (பேட்டிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 9

இன்னிங்க்ஸ் விளையாடியது: 5

மொத்த ரன்கள்: 165

சராசரி: 33

ஸ்ட்ரைக் ரேட்: 96.49

விஜய் சங்கர் (பௌலிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 9

இன்னிங்க்ஸ் விளையாடியது: 8

மொத்த விக்கெட்கள்: 2

எகனாமி: 5.61

கேதர் ஜாதவ் (பேட்டிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 59

இன்னிங்க்ஸ் விளையாடியது: 40

மொத்த ரன்கள்: 1174

சராசரி: 43.48

ஸ்ட்ரைக் ரேட்: 102.53

கேதர் ஜாதவ் (பௌலிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 59

இன்னிங்க்ஸ் விளையாடியது: 36

மொத்த விக்கெட்கள்: 27

எகனாமி: 5.15

ஹர்திக் பாண்டியா (பேட்டிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 45

இன்னிங்க்ஸ் விளையாடியது: 29

மொத்த ரன்கள்: 731

சராசரி: 29.24

ஸ்ட்ரைக் ரேட்: 116.59

ஹர்திக் பாண்டியா (பௌலிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 45

இன்னிங்க்ஸ் விளையாடியது: 44

மொத்த விக்கெட்கள்: 44

எகனாமி: 5.54

விக்கெட் கீப்பர்கள் கே.எல்.ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக்.

கே.எல்.ராகுல் (பேட்டிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 14

இன்னிங்க்ஸ் விளையாடியது: 13

மொத்த ரன்கள்: 343

சராசரி: 34.3

ஸ்ட்ரைக் ரேட்: 80.9

தினேஷ் கார்த்திக் (பேட்டிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 91

இன்னிங்க்ஸ் விளையாடியது: 77

மொத்த ரன்கள்: 1738

சராசரி: 31.04

ஸ்ட்ரைக் ரேட்: 73.71

சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஷ்வேந்தர் சாஹல்.

குல்தீப் யாதவ் (பௌலிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 44

இன்னிங்க்ஸ் விளையாடியது: 42

மொத்த விக்கெட்கள்: 87

எகனாமி: 4.94

யுஷ்வேந்தர் சாஹல் (பௌலிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 41

இன்னிங்க்ஸ் விளையாடியது: 40

மொத்த விக்கெட்கள்: 72

எகனாமி: 4.51

வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா.

ஜஸ்ப்ரிட் பும்ரா (பௌலிங்):

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 49

இன்னிங்க்ஸ் விளையாடியது: 49

மொத்த விக்கெட்கள்: 85

எகனாமி: 4.89

icc worldcup 2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe