வெ.அருண்குமார்

7th League Match of the World Cup

வங்க தேசம் மற்றும் இங்கிலாந்து இடையே தரம்சாலாவில் உலகக் கோப்பையின் 7 ஆவது லீக் ஆட்டம் காலை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, வங்க தேச வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன்கள் குவித்தது.

Advertisment

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மாலன், பேர்ஸ்டோ இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்து ஷகிப் பந்து வீச்சில் ஆட்டம் இழக்க, அடுத்து மாலனுடன் ஜோ ரூட் இணைந்தார்.ரூட் அவ்வப்போது அதிரடி காட்ட, மாலனோ வங்க தேச பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்து ரன்கள் குவித்தார். சிறப்பாக ஆடி சதம் கடந்த மாலன், 16 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 140 ரன்கள் குவித்து மெஹெதி ஹசன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Advertisment

அடுத்து வந்த பட்லர் 20, ப்ரூக் 20, சாம் கரன் 11, வோக்ஸ் 14 என சொற்ப ரன்களில் வெளியேற, ஜோ ரூட் மட்டும் அரைசதம் அடித்து 82 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. வங்க தேச தரப்பில் மெஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளும், இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், ஷகிப் மற்றும் அஹமத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக் காரர் டன்சித் ஹசன் 1 ரன்னிலும், ஷான்டோ ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஷகிப் 1 ரன்னிலும் , மிராஜ் 8 ரன்னிலும் வெளியேற 49/4 என்று தடுமாறி ஆடி வருகிறது.