ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள்; ருதுராஜ் ஆடிய ருத்ரதாண்டவம்

7 sixes in one over; Rudraaj hits

விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்ட்ராஅணிக்கும் உத்திரப்பிரதேச அணிக்கும் இடையேயான காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மகாராஷ்ட்ராஅணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்களை அடித்தர். 159 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் உட்பட 220 ரன்களை சேர்த்தார்.

உத்திரப்பிரதேச அணி வீரர் ஷிவா சிங் வீசிய 49 ஆவது ஓவரில் நோ பால் உட்பட அனைத்து பந்துகளையும்சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe