Skip to main content

5க்கு 5; உடைபட்ட 14 ஆண்டுக்கால சாதனை; மும்பை இளம் வீரர் வரலாற்றுச் சாதனை

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

5 out of 5; 14-year record broken; A historic feat for the Mumbai youth

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 182 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக க்ரீன் 41 ரன்களை எடுத்தார். லக்னோ அணியில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்களையும் யஷ் தாக்கூர் 3 விக்கெட்களையும் எடுத்தனர். பின் களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் ஆகாஷ் மாத்வால் 5  விக்கெட்களை வீழ்த்தினார்.

 

ஐபிஎல் சீசன்களில் ப்ளே ஆஃப் போட்டியில் தனி வீரர் ஒருவரின் அரைசதம் இன்றி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றது. நேற்றைய போட்டியில் குருணால் பாண்டியா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் 9 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள அவர் 47 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 5.87.

 

ஐபிஎல் தொடரில் ஒரு ஆட்டத்தில் குறைந்த எகானமி ரேட்டில் 5 விக்கெட்களை வீழ்த்திய பெருமையை ஆகாஷ் மாத்வால் பெற்றார். அவர் 5 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி  1.4 என்ற எகானமி ரேட்டுடன் இச்சாதனையை படத்துள்ளார். இரண்டாம் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார். அவர் 1.57 எகானமி ரேட்டில் இச்சாதனையை படைத்திருந்தார். மேலும் ஆகாச் மேத்வால் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை நேற்று பதிவு செய்தார். குறைவான ரன்களை மட்டும் கொடுத்து அதிக விக்கெட்களை வீழ்த்திய தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரு வீரர் என்ற சாதனையையும் ஆகாஷ் மாத்வால் படைத்துள்ளார்.

 

 

Next Story

காற்றின் குழந்தை; நீங்கள் ஒரு ரத்தினம் - பாராட்டு மழையில் இந்தியாவின் வேக மன்னன்!

Published on 03/04/2024 | Edited on 04/04/2024
Child of the Wind; You are a gem - India's speed king mayank yadav in shower of compliments

இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் புதிய முகமாக உருவெடுத்துள்ளார் லக்னோ அணியின் வீரரான மயங்க் யாதவ். அறிமுகமான இரண்டு போட்டிகளிலேயே ஒட்டுமொத்த கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பிரபலமடைந்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழும் அளவுக்கு என்ன செய்தார் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

டெல்லியைச் சேர்ந்த 21 வயதே ஆன மயங்க் யாதவ் ஒரே ஒரு முதல் தர போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். List A கிரிக்கெட்டில் 17 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2023 ஆம் வருடம் ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு லக்னோ அணியால் எடுக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அந்த சீசனில் விளையாடவில்லை. 

இதையடுத்து இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் மயங்க் யாதவ். அறிமுக ஆட்டத்திலேயே அசத்தினார். 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய வீரர்களான பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தான் வீசிய அனைத்து பந்துகளும் 140கி.மீ வேகத்துக்கு குறையாமல் வீசுவதால், முதல் ஆட்டத்திலேயே கவனம் பெற்றார். சீரான வேகத்தில் வீசுவதால் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், ஐபிஎல் 2024இன் 15 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, லக்னோ அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், தயால், டாப்லி, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 19.4 ஓவர்களில் பெங்களூரு அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்ததன் மூலம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளும், அவரின் 156.7 கி.மீ வேகமும் தான் கிரிக்கெட் உலகத்தில் பேசுபொருளாகி உள்ளது. நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் வீசப்பட்ட இரண்டாவது ஓவரின் முதல் பந்து 156.7 கி.மீ வேகத்தில் வீசப்பட்டது. இதுவே இந்த 2024 சீசனில் தற்போது வரை மிகச்சிறந்த வேகமாகும். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவின் பர்கர் 153 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகத்தில் வீசிய இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார். உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் முதலிடத்தில் உள்ளார்.

இவரின் 156.7 கி.மீ வேகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப்பந்து வீச்சின் ஜாம்பவனான வெஸ்ட் இண்டீஸின் இயான் பிஷப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மயங்க் பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “இந்த மயங்க் யாதவ் காற்றின் குழந்தை போல பந்து வீசுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கவின் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் ஸ்டெயினின் பதிவில் “இது ஒரு தீவிரமான வேகம்” என குறிப்பிட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் பதிவில் “என்ன ஒரு வேகம்” எனவும், புகழ்பெற்ற வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே “ நீங்கள் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு மயங்க் யாதவ் பந்து வீசுவதைப் பாருங்கள். லக்னோ, நீங்கள் ஒரு ரத்தினத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இந்தியாவின் முனாஃப் பட்டேலுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பின்பு வருண் ஆரோன்,பும்ரா,உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால், பும்ரா தவிர்த்து ஆரோனும், உம்ரானும் வேகத்தில் செலுத்திய கவனத்தை துல்லியத்தில், மயங்க் அளவுக்கு செலுத்தவில்லை. அதனால் அவர்கள் விக்கெட் எடுக்கத் தடுமாறினர். ஆனால், மயங்க் வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். 

பும்ரா,ஷமி,சிராஜுக்குப் பிறகு பெரிதாக வேகப்பந்து வீச்சில் யாரும் இந்த அளவுக்கு ஈர்க்கவில்லை. பேட்டிங்கில், கோலிக்கு பிறகு, கில், யசஸ்வி, இஷான், ரிங்கு, திலக் வர்மா என முக்கிய வீரர்களாக பலர் உருவாகி வருகிறார்கள். தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். ஆனால், பந்து வீச்சில் பும்ரா அளவுக்கு யாரும் ஈர்க்கவில்லை. பும்ராவுக்கு அடுத்து யார் முக்கிய வீரராக இருக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் பேசி வந்த நிலையில், இந்தியாவின் வருங்கால வேகப்பந்து வீச்சு கூட்டணியில் இவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ!

Published on 30/03/2024 | Edited on 02/04/2024
Lucknow beat Punjab to record first win ipl 2024

ஐபிஎல் 2024 இல் 11 ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் நடைபெற்றது.  டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக டி.காக் மற்றும் கே.எல்.ராகுலும்  களமிறங்கினர். 15 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த படிக்கல்லும் 9 ரன்களில் வெளியேறினார்.  இதையடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, டி. காக் அதிரடியாக அடித்துச் சதமடித்து ஆட்டமிழந்தார்.  இதனைத் தொடர்ந்து களமிரங்கிய நிக்கோலஸ் பூரன் 42(21), குருணால் பாண்டியா43(21) எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தனர்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தவானும், பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்த 102 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்தடுத்த வந்த வீரர்கள் ஆட்டமிழக்க மறுமுனையில் தவான் நின்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாகப் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 178  ரன்கள் மட்டுமே எடுத்தனர். 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐ.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.