இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 27 ஆம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்குமோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கரோனாபாதிப்பில் இருந்து மீண்ட கங்குலி, கடந்த 31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுத்தியுள்ளனர்.இந்தநிலையில்கங்குலியின் மகள் உள்பட அவரது குடும்பத்தினர் நால்வருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது.இதையடுத்து கரோனா உறுதி செய்யப்பட்ட நால்வரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.