3rd one day match australia vs india

Advertisment

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 303 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

3rd one day match australia vs india

Advertisment

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தனர். அதேபோல் கேப்டன் விராட் கோலி 63 ரன்கள், சுப்மன் கில் 33 ரன்கள் எடுத்தனர்.

இன்றையபோட்டியின் மூலம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ரன்களை குவித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். மிகவும் குறைவான போட்டிகளில் (242) 12,000 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.