Skip to main content

இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு 

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

277 runs target for India

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. 

 

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று மொகாலியில் தொடங்கியது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு முதல் இரு போட்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், முதல் இரு ஆட்டங்களை கே.எல். ராகுல் இந்திய அணியைத் தலைமை ஏற்று நடத்துகிறார். 

 

இந்த முதல் நாள் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது. 35 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி  4 விக்கெட்டை இழந்து 166 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நின்றது. இதனையடுத்து, மைதானத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 

 

அதன் பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர். தற்போது உள்ள நிலையின்படி, இந்திய அணி எந்தவித விக்கெட் இழப்பில்லாமல் 6 ஓவருக்கு 41 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

T20 series against Australia; Indian team announcement

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. 

 

இந்த நிலையில், இந்த தொடரில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருத்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா (WK), வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னாய், அர்ஸ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் துணை கேப்டனாக கடைசி இரு போட்டிகளுக்கு இந்திய அணியுடன் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்