Advertisment

2023 ஐபிஎல்; சிஎஸ்கே அணியில் யார் உள்ளே யார் வெளியே!

2023 IPL; Who is in and who is out in the CSK team

Advertisment

16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அணியின் நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.

இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களுக்குத்தேவையான வீரர்களை மட்டும் அணியில் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை வெளியில் விட்டுள்ளது.

தற்போது சென்னை அணியிலிருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன் படி ஜெகதீசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எஸ்.ஆசிப் உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் தோனி, கான்வே, ருதுராஜ், அம்பத்ராயுடு, சேனாபதி, மொயின் அலி, தூபே, ராஜவர்தன், பிரிடோரியஸ், சாண்ட்னர், ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரஷாந்த் சோலான்கி, தீக்‌ஷனா போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆல் ரவுண்டர் ஜடேஜா சென்னை அணியில் நீடிப்பாராஎன்ற சந்தேகம் பல மாதங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு நீடிப்பார் என்பதை உறுதி செய்துள்ளது.

CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe