உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த முறை உலகக்கோப்பை போட்டிகள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

2019 icc worldcup cricket england

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையில் சராசரியாக 300 ரன்கள் அடிக்கப்பட்டது. டாஸ் வென்ற அணி முதலில் பேட் செய்து 300 ரன்கள் குவித்து எதிர் அணியை வீழ்த்துவது என்பது கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே நடந்தது. டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வது எழுதப்படாத விதியாக இருந்தது. இவ்வாறு முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான கடந்த உலகக்கோப்பையை போல இந்த உலகக்கோப்பையும் பேட்டிங்கிற்கு சாதகமாகதான் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த உலகக்கோப்பையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது. அதன் பிறகு அந்த அணியிலும், இங்கிலாந்து மைதானங்களிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மைதானங்கள் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமானதாய் வடிவமைக்கப்பட்டன. 2015 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 300 அடித்த அணி இங்கிலாந்துதான். அதுபோல 2015 உலகக்கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து மைதானங்களில் மட்டும் 29 முறை 300 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபியிலும் பெரும்பாலான போட்டிகளில் சராசரியாக 300 ரன்கள் அடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இரண்டு முறை 400 கும் மேல் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன .இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட 481 ரன்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட 481 ரன்கள்தான் ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கான தொடரில் 3 போட்டிகளில் 6 முறை 300 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆடும் அணி 300 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தாலும் இரண்டாவதாக ஆடும் அணி அதனை சேஸ் செய்துவிடுகிறது. எனவே இந்த உலகக்கோப்பையில் பாதுகாப்பான இலக்கு என்று எதுவும் இருக்காது, என்பது மட்டுமில்லாமல் கடந்த உலகக்கோப்பையை விட இந்த முறை பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் சாதகமாகத்தான் இருக்கும் என்றே உணரமுடிகிறது.

இங்கிலாந்தில் பவுண்டரிகளின் நீளம் குறைவு, பேட்டிங்கிற்கு முற்றிலும் சாதகமான ஆடுகளம் போன்றவற்றால் ரன் குவிப்பு மிகவும் எளிதாக உள்ளது. மேலும் இங்கிலாந்தில் எப்போதும் பந்து மற்ற நாடுகளை விட அதிகமாக ஸ்விங் ஆகும். இதற்கு அங்கு நிலவும் சீதோஷண நிலையும் ஒரு காரணம். ஆனால் தற்போது பயன்படுத்த படும் கூகபுரா வகையான பந்து விரைவிலேயே இலகுவாகிவிடும் என்பதால் அதிகமா ஸ்விங் ஆகாது எனவும். மேலும் விரைவிலேயே பந்து ஸ்விங் ஆவது நின்று விடும் எனவும் கணிக்கபட்டுள்ளது.

Advertisment

இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காத ஆடுகளமும், பந்தும் ஒன்றிணைவதால் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த மிகவும் கடினமாகும் என்பதால் இந்த உலகக்கோப்பை பந்து வீச்சாளர்களுக்கு ரணமாய் அமையப்போகிறது என்பது மட்டும் நிச்சயமாகிறது.