ADVERTISEMENT

இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு! 

03:38 PM Oct 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இது நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

இந்த 2022 டி 20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு முறை சாம்பியன் அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி சூப்பர் 12 சுற்றுக்கே தேர்வாகாமல் வெளியேறி உள்ளது. அதேபோல் கடந்த சீசனில் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அவர்கள் சொந்த மண்ணிலேயே இந்த முறை நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வமாக பார்த்துவருகின்றனர். இன்று மெல்போர்னில் நடந்துவரும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில். பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. இதில் தற்போது முதல் இன்னிங்ஸ் முடிவடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெடுகள் இழப்புக்கு 159 ரன்களை குவித்துள்ளது. இந்தியாவுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா மூன்று விக்கெடுகளை வீழ்த்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT