157 is target for srilanka

பெங்களுரூ, சின்னசாமி மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் 25வது போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இன்று (26ம் தேதி) மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஒருவர் கூடஇன்றைய ஆட்டத்தில் அரை சதத்தைக் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களை அடித்தார். பாரிஸ்டௌ 30 ரன்களும், டேவிட் மாலன் 28 ரன்களும் எடுத்தனர்.

Advertisment

மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 33.2ஓவர்களில் 156 ரன்களில்தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Advertisment

இலங்கை அணியில், லஹிரு குமார 3 விக்கெட்களையும், ரஜிதா மற்றும் மேத்திவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தீக்‌ஷனா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டங்களில்முதல் இன்னிங்ஸின் குறைவான ஸ்கோர்கள்;2003ல் இலங்கை தம்புளா 88 ரன்கள், 2001ல்இலங்கை தம்புளா 143 ரன்கள் மற்றும் 2023பெங்களுரூ (26.10.23) 156 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.