இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இன்றுடன் கிரிக்கெட் விளையாட தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை உலகம் முழுவதும் தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

15 years of dhonism celebrations in srilanka

அதன் ஒரு பகுதியாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தோனியின் ரசிகர்கள் கேக் வெட்டி, சிறப்பு ரத்த தான முகாம் நடத்தி கொண்டாடினர். மேலும் கைதடி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்ற ரசிகர்கள், அங்கிருக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கி தோனியின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பங்களிப்பை கொண்டாடினர். 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி தனது பேட்டிங், கீப்பிங் திறமை மற்றும் கேப்டன்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றார். தோனி கேப்டனாக இருந்த போது இந்திய அணி, டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.