ADVERTISEMENT

முறியடிக்கப்பட்ட 15 வருட சாதனை; அறிமுக வீரர் விவ்ரந்த் ஷர்மா அபாரம்; மும்பை வெற்றி

08:05 PM May 21, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

16 ஆவது ஐபிஎல் தொடரின் 69 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசரஸ் ஹைத்ராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 200 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 83 ரன்களையும் விவ்ரந்த் ஷர்மா 69 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணியில் ஆகாஷ் மாத்வால் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேம்ரூன் க்ரீன் 100 ரன்களை எடுத்தார். ரோஹித் சர்மா 56 ரன்களை எடுத்தார். ஹைதராபாத் அணியில் மயங்க் தாகர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சதமடித்த கேம்ரூன் க்ரீன் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விவ்ரந்த் ஷர்மா முதலிடத்தை பிடித்தார். இவர் இன்றைய போட்டியில் 61 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 2008 ஆம் ஆண்டு 60 ரன்களை அடித்து முதலிடத்தில் இருந்த ஸ்வப்னில் அஸ்னோட்கரை பின்னுக்குத் தள்ளி விவ்ரந்த் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் கவுதம் கம்பீர் உள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் 58 ரன்களை எடுத்திருந்தார். ஆடவர் டி20 கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை தாண்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். முன்னதாக விராட் கோலி 11,864 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT