ADVERTISEMENT

உயரிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒலிம்பிக் சாதனையாளர்கள்!

06:38 PM Oct 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, விருது அண்மையில் தயான்சந்த் கேல் ரத்னா எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்தநிலையில் தேசிய விளையாட்டு விருதுகள் குழு, 11 வீரர்களை இந்தாண்டிற்கான தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது.

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவி தஹியா, மகளிர் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் தயான்சந்த் கேல் ரத்னா விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பாராஒலிம்பிக் போட்டிகளில், பேட்மிண்டனின் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்ற பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதளில் தங்கம் வென்ற சுமித் அன்டில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் இருவேறு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அவனி லேகாரா, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ் நர்வால் ஆகியோரும் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர, ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ், இந்தியக் கால்பந்தாட்ட நட்சத்திரம் சுனில் சேத்ரி, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரும் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT