Skip to main content

வரம்பு மீறிய சேவாக்! பக்குவமாக நடந்து கொண்ட மேக்ஸ்வெல்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

Glenn Maxwell

 

 

13-ஆவது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் வழிநடத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், அதிரடிக்கு பெயர் பெற்ற இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசும்போது, மேக்ஸ்வெல்லை  விலையுயர்ந்த சியர்ஸ்லீடர் என்றும், அதிகம் ஊதியம் பெற்று விடுமுறையில் இருப்பவர் என்றும் குறிப்பிட்டார். சேவாக்கின் இந்தக் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த மேக்ஸ்வெல், "என்னை விரும்பாததை சேவாக் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அவர் கூற விரும்புவதைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. நான் அதை கடந்து போகிறேன். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற விமர்சனங்களைக் கையாள்வதில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

 

 

Next Story

வெறுப்பான முறையில் மெசேஜ் அனுப்பியவர்களுக்கு மேக்ஸ்வெல் மனைவி பதிலடி

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

'For those who send hate messages...' - Australia cricketer Maxwell's wife explains

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், தனக்கு எதிராக ரசிகர்கள் சிலர் வெறுப்புடன் மெசேஜ்களை அனுப்புவதாக வினி மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மெசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தையின் அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்சனைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

பெங்களூர் அணிக்கு பின்னடைவு: தொடக்க போட்டிகளில் மேக்ஸ்வெல் இல்லை!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

maxwell

 

ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்ற மெகா ஏலத்தையொட்டி அவரை பெங்களூர் அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்துள்ளது.

 

இந்தநிலையில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும், ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவருக்கும் வருகிற மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக மேக்ஸ்வெல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளை மார்ச் 27 ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.