உலக அளவில் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட் ஆகும். குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்டின் மீதான மோகம் அளவுக்கு அதிகமானதாகவே இருந்து வருகிறது. அதனால் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் பெரும் வரவேற்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களால் பெரிதளவு கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய ரசிகர்களின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் காரணமாகவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ) கொண்டுவரப்பட்டது தான் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்). இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வாகவும். 8 அணிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் 10 அணிகளுடன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அணிகளுக்கான வீரர்களை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுப்பது என்பது நடைமுறையாக உள்ளது.
அந்த வகையில் நடக்க இருக்கும் ஐபிஎல் 2026 சீசன் 19க்கான மினி ஏலம் நேற்று (16-12-25) துபாயில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 10 அணிகள் போட்டி போட்டுக்கொண்டு 77 வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அணைத்து தரப்பு வீரர்களையும் அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியது. நடந்து முடிந்த ஐபிஎல் 2026 ஏலத்தில் 10 அணிகளும் மொத்தம் 77 வீரர்களுக்காக ரூ. 215.45 கோடி செலவிட்டன, அவர்களில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகபட்ச தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் கேமரூன் கிரீன் ரூ. 25.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 18 கோடிக்கு மதீஷ பத்திரன, ரூ. 13 கோடிக்கு லியாம் லிவிங்ஸ்டோன், ரூ. 9.20 கோடிக்கு முஸ்தாபிசுர் ரஹ்மான், ரூ. 8.60 கோடிக்கு ஜோஷ் இங்கிலிஸ், ரூ. 7 கோடிக்கு ஜேசன் ஹோல்டர் என வாங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரூ. 25.20 கோடி) ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெளிநாட்டு வீரருக்காகப் பெறப்பட்ட மிக அதிகபட்ச ஏலத்தொகையைப் பெற்றார். இருப்பினும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமான தேர்வாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா ரூ. 14.20 கோடிக்குத் தேர்ந்தெடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரருக்கும் வழங்கப்பட்ட மிக அதிகபட்ச சம்பளம் இதுவாகும் . இவ்வாறான ஆச்சரியத்தை கொடுத்த சிஎஸ்கே அணி, மேலும் ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அது, சர்பராஸ் கானை ரூ. 75 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத நிலையில் தற்போது சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இதன் காரணமாக மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற சர்பராஸ் கான், தனது சமூக வலைதளத்தின் மூலமாக சிஎஸ்கே அணிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகர் நானி நடித்த ஜெர்சி படத்தில் உள்ள வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் நடிகர் நானி, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் அணிக்குத் திரும்பும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரயில் நிலையத்திற்குச் சென்று, ரயில் வரும் சத்தத்தில் தனது மகிழ்ச்சியை அந்த காட்சியில் வெளிப்படுத்துவார். அந்த மனநிலையில் இருக்கும் சர்பராஸ் கான் இந்த வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/17/sarfaraz-2025-12-17-12-51-20.jpg)