தமிழ்நாட்டின் தொன்ம வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து, மரபுச் சின்னங்களை ஆவணப்படுத்தும் தொல்லியல் பணிகளை அக்கறையோடும் முனைப்போடும் இன்றைய தமிழ்நாடு அரசு செய்து வருவதை அனைவரும் அறிவோம். அதன் விளைவாக, 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் எனும் பெருமித வரலாற்றை அறிய முடிந்தது.
உலகில் முதலில் இரும்பைப் பயன்படுத்தியது பண்டைத் தமிழகமே என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழின் தொன்மம் பற்றிய மேலும் பல வியப்பூட்டும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என நம்புவோம். அரசுத் துறைகளுக்கு இணையாக கோவையைச் சார்ந்த
சுதாகர், குமாரவேல் ஆகிய இளைஞர்கள், தங்களது ‘யாக்கை மரபு அறக்கட்டளை’ மூலமாக 2017ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அரிய வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.அவர்கள் இதுவரை1500 நடுகற்கள்,
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/26/ima-2025-11-26-14-32-34.jpeg)
யாக்கை அறக்கட்டளையின் சில முக்கியக் கண்டுபிடிப்புகள் பல்வேறு ஆய்விதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், நீலமலையின்
தமிழ்நாடு அரசின் தொல்லியல் பணிகளுக்கு மூல ஆதாரமாக இருக்கும் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு யாக்கை அறக்கட்டளையின் பணிகளை பல ஆண்டுகளாக கவனித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். தொல்லியல் தேடுதலில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அக்கறை காரணமாக தமது அயராத தொடர் பணிகள் இடையேயும் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற ஒப்புதல் தந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/thangam-thennarasu-2025-11-26-14-30-11.jpg)