Skip to main content

காடுகள் மற்றும் நிலத்தடி நீரை ஏன் பாதுகாக்க வேண்டும்..?

தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் சுட்டுக் கொள்ளப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் சாம்பல் ஏன் மலைகளின் மீது தூவப்பட்டது தெரியுமா?  இயற்கை அன்னையின் மீது  அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் நல்ல எண்ணமும் வைத்திருந்தார் அதனால் தான். பிரதமர் பொறுப்போடு சேர்த்து சுற்றுப்புற சூழல் துறையையும் தனது தனி பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தனிஅமைச்சரவை ஏற்படுத்தினார். தனித்தனி மாறுபட்ட அமைப்புகளை அமைத்தார். துல்லியமாக திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு கமிட்டிகளை நியமித்தார். தேசிய சுற்று சூழல் திட்டக் கமிட்டி, தேசிய வளர்ச்சி போர்டு அதன் பகுதியாக இந்திய தாவர அளவைத்துறை,  இந்திய விலங்கியல் அளவைத்துறை, மத்திய தண்ணீர் மாசு தடுப்பு கட்டுப்பாட்டு குழுமம், தேசிய இயற்கை சரித்திர அருங்காட்சி கூடம் போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதற்கு முந்தைய கால கட்டங்களிலும் சில முன் முயற்சிகள் எடுக்கப்பட்டன. 



காடுகளும் காட்டு விலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டியது மாநிலங்களின் உரிமைகளில் சேர்க்கப்பட்டது. காடுகளின் செல்வங்கள் பாதுகாப்பது விலங்குகள் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை என அறிவிக்கப்பட்டது. கொடு விலங்குகள் பாதுகாப்பு சட்ட முன்வடிவின் மூலம் வேட்டையாடுதல் கட்டுப்படுத்தப்பட்டது. சரணாலயங்கள், உயிர் நிலைக் கலங்கள், தேசிய பூங்காக்கள், தண்ணீர் சட்ட முன் வடிவம், தண்ணீர் மாசு தடுப்பு மசோதா போன்ற விசயங்களில் மாநில அரசுகளின் தன்னுரிமை பெற்ற குழுக்கள் அமைக்க அறிவுறுத்தப் பட்டது. தண்ணீரின் இயற்கையான ஓட்டத்தை தெரிந்தே தடுப்பது, தண்ணீரில் மாசு கலப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டது. இன்று அந்த சட்டங்கள் பல மாற்றங்களுடன் மேலும் வலுப்பெற்று நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆனால் சில தனி மனிதர்களின் தண்ணீரை வைத்து பணம் சம்பாதிக்கும் பேராசை குணங்களால் அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு முழுவதும் போய் சேராமல் தடுக்கப்படுகிறது. காடுகளை பாதுகாப்போம் மரங்கள் வளர்ப்போம். நிலத்தடி நீரை பாதுகாப்போம். தண்ணீரை வீணாக்காதீர்கள். நம் அடுத்த தலைமுறை வாரிசுகள் தாகத்துடன் அலையக் கூடாது.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...