Skip to main content

பயணத்தின்போது டிரைவர்கள் தூங்குவது ஏன் தெரியுமா? 

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

2016ஆம் ஆண்டு சாலைவிபத்து குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 17 பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 1.46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக ஒரு தகவல் சொல்கிறது. 
 

road

 

 

 

விதிகளை கடுமையாக்கியும், பல்வேறு ஆய்வுகளை நடத்தியும் இந்த சாலைவிபத்துகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சாலைவிபத்து ஏற்படுவதற்கான ஆராய்ச்சி ஒன்றை நடத்தி, அதற்கான விடையையும் கண்டுபிடித்திருக்கிறது. 
 

பொதுவாக மோசமான சாலைவிபத்துகளில் 20% டிரைவரின் சோர்வே காரணம் என்பது பரவலாக சொல்லப்படும் கருத்து. அந்த வகையில், டிரைவின் வாகனம்தான் விபத்து ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்து உருவாகும் அதிர்வலைகள் அல்லது வைப்ரேஷன் வெறும் 15 நிமிடங்களில் ஓட்டுநரை உறக்கநிலைக்கும், கவனச்சிதறல் நிலைக்கும் தள்ளிவிடுகிறது. குறைந்த அதிர்வலைகள் குறிப்பாக ஓட்டுநரின் மூளையை மந்தமாக்கி விடுகிறது. குறிப்பாக, ஓட்டுபவர் நல்ல ஓய்வில், நல்ல உடல்நலத்துடன் இருந்தாலும் இது நடப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. 

 

 

வாகன உற்பத்தியாளர்கள் இந்த வைப்ரேஷன்களைக் கட்டுப்படுத்த ஆய்வு நடத்தி வருகிறார்களாம். என்னதான் இருந்தாலும், வாகன ஓட்டிகள் உறக்கம் வந்தால் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்வதே பாதுகாப்பைத் தரும் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது. 


 

Next Story

'தொப்பூர் கணவாய்' - கொலைகார சாலைக்கு என்னதான் தீர்வு?

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
 'Toppur Pass' - What is the solution to the killer road?

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு முன்பே இதேபோல தொப்பூர் பகுதியில் கணவாயில் எண்ணிலடங்கா மிகப் பெரும் விபத்துக்கள் நிகழ்ந்திருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் இன்று (28/02/2024) காலை அங்கு ஏற்பட்ட  விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது லாரி மோதியதில் கார்கள் உட்பட ஐந்து வாகனங்கள் தொடர்ச்சியாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

n

சில நாட்களுக்கு முன்பு தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை மிகவும் கண்டித்து 'நடந்தது விபத்து அல்ல மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொலை' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருத்தார். அதில், 'சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அந்த வகையில் பார்த்தால் தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல... மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர படுகொலை என்று தான் கூற வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரூ.775 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தொப்பூர் பகுதியில் விபத்து நடக்காது என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. தொப்பூர் கொலைகாரச் சாலையில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

அதேநேரம் அங்கு நிகழும் விபத்துகளுக்கு பிற்போக்குத்தனமாக அமானுஷ்யங்களே காரணம் என உள்ளூர் வாசிகள் சிலரால் நம்பப்படுகிறது. ஆம்புலன்ஸ் சத்தங்கள் அந்தப்பகுதி மக்களுக்கு சாதாரணம் என்ற அளவிற்கு விபத்துகள் சாதாரணமாகிவிட்ட நிலையில், தொப்பூர் கணவாய் விபத்துகளுக்கு தீர்வு வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. 

Next Story

தாறுமாறாகக் காரை ஓட்டிய போதை தம்பதி; கிரேனை வைத்துத் தடுத்த போலீசார்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
A drunken couple who drove the wrong way; The police stopped it with a crane

மது போதையில் வந்த தம்பதிகள் தாறுமாறாக காரை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விட்டு நிற்காத நிலையில், போலீசார் கிரேனை வைத்து அவர்களைப் பிடித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்துள்ள மரியபள்ளி பகுதியில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டருக்கு கார் ஒன்று தாறுமாறாக படு வேகத்தில் பறந்தது. பல இடங்களில் தடுத்து நிறுத்தியும் காரானது வேகமாகப் பறந்தது. இதை அறிந்து போலீசார் சாலையில் பெரிய ராட்சத கிரேனை நிறுத்தி அந்த காரை தடுத்து நிறுத்தினர்.

காரில் தம்பதி இருவர் இருந்தனர். இருவரும் மித மிஞ்சிய போதையில் இருந்தது தெரிய வந்தது. சட்டையைப் பிடித்து காரை இயக்கிய நபரை போலீசார் வெளியே இழுத்தனர். ஆனால் அந்த நபர் போலீசாருக்கே மிரட்டல் விடும் வகையில் பேசினார். மேலும் அந்த காரில் 5 கிராம் அளவிற்கு கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.