Advertisment

ஜிம்முக்கு போனாலும் டயட் இருந்தாலும் உடல் எடை குறையாதது ஏன்?

Why can't  lose weight despite dieting and going to the gym?

உடல் எடை குறைப்பதற்காக டயட் என்று சொல்லிவிட்டு உணவு எடுத்துக் கொள்வதில் மாற்றம் ஏற்படுத்துவது, ஜிம்முக்கு போய் வியர்க்குமளவிற்கு உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை முயன்றும் சிலருக்கு உடல் எடைகுறைவதில்லையே என்ற கேள்வியை நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக பிரபல டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

Advertisment

டயட் இருந்தும் ஜிம்முக்கு சென்றும் உடல் பருமன் குறையாமல் இருப்பதற்கு இரு வகையான தைராய்டு தான் காரணமாக இருக்கிறது. அதை விளக்கமாக காணலாம்.

Advertisment

உலக அழகிகள் எல்லாரையும் ஹைப்பர் தைராடிக் என்போம். இந்த வகை தைராய்டு ஹார்மோன் நம் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவக்கூடியது. இது குறையும் பட்சத்தில் குறைபாடு ஏற்படக்கூடும். இப்போது உள்ள உடல் பருமனான பெண்கள் எல்லாம் ஹைப்போ தைராடிக் இருக்கிறது அதனால் பருமனாக இருக்கிறேன் என்பார்கள். ஹைப்பர்தைராடிக் இருப்பவர்களும் ஹைப்போ தைராய்டு இருப்பவர்களும் உணவு விசயத்தில் கவனம் செலுத்தும் போது உடல் எடை ஏறாமல் மற்றும் இறங்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள் ஒல்லியாகவும், ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள் குண்டாகவும் இருப்பார்கள். ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு உடலில் உள்ள மெட்டபாலிசம் குறையும். இதனால் இதயம், குடல் அசைவுகளில் மாறுபாடு ஏற்படும். ஹைப்பர் தைராய்டில் மெட்டபாலிசம் வகைகள் அதிகமாக இருக்கும்அதனால் உடல் மாறுபாடும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் சரிவிகிதத்தில் இருப்பவர்கள் எப்போதும் சரியான உடல் எடையில் இருப்பார்கள்.

அதனால் தான் உடல் பருமனை குறைக்க மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் உங்களுடைய தைராய்டு அளவு மற்றும் வகையைப்பரிசோதித்து நீங்கள் உடல் பருமனைகுறைப்பதற்கான வேலைகளில் இறங்கலாம். தைராய்டு அளவைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் நீங்களாகவே உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்தாலும், ஜிம்முக்கு போனாலும் உடல் பருமன் குறையாது.

drArunachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe