Advertisment

"வீடுகளில் என்ன மூலிகைச் செடிகளை வளர்க்கலாம்” - மருத்துவர் ஷர்மிகா விளக்கம்

publive-image

Advertisment

‘ஓம் சரவண பவ’ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் உண்ண வேண்டும் என்பது பற்றி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், வீடுகளில் என்ன மூலிகைச் செடிகளை வளர்க்கலாம் அதன் பயன்கள் பற்றியகேள்விக்கு அவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

நாம் டெக்னாலஜி என்றுபுதுசு புதுசா நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையாகவே அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது மிளகாய்த் தூள் எப்படி அரைப்பது?மல்லித் தூள் எப்படி அரைப்பது?மஞ்சள்தூள் எப்படி அரைப்பது இதையெல்லாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் நாம் இன்று பாக்கெட்டுகளில் வாங்கி பயன்படுத்துகிற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்.

செடிகள் வளர்ப்பது என்பது சிறு வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்ட பழக்கம்தான். நாளடைவில் வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பதே ஆச்சரியமானதாக மாறிப்போனது. சில செடிகளை நாம் வீட்டிலேயே மண் தொட்டிகளில் வளர்க்கலாம்.

Advertisment

குப்பைமேனி இலைஎப்படி இருக்கும், கறிவேப்பிலை எப்படி இருக்கும். இந்த செடிகளை எல்லாம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். குப்பைமேனி, ஆவாரம் பூ, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கற்றாழை, கீழாநெல்லி, மணி பிளாண்ட் இவை எல்லாவற்றையுமே நாம் வீட்டிலேயே வளர்க்கலாம். எளிதில் வளரக்கூடியவைதான்; இதனைத்தேவைக்கேற்ப நாம் மூலிகையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மணி பிளாண்ட் வளர்த்தால் மூலிகை மருந்தாகும்என்று எதுவும் இல்லை. ஆனாலும் மனசுக்கு ஆறுதல் அளிக்கும். மனசு நிம்மதியாக இருந்தால் பணம் கொழிக்கும். ஒரு மனிதனுக்கு மன அமைதியைத் தரும் கலர் பச்சையும், நீலமும் ஆகும். உலகத்தைப் பச்சையாகவும், கடல் மற்றும் வானம் இரண்டையும்நீலமான சரிவிகித அளவாகவே இருக்கும். மணி பிளாண்ட் பச்சையாக நன்றாக வளர்ந்து வரும். மனதுக்கு அமைதித் தன்மையைத் தரும்.

இதனால் பெரியவர்கள் செடி வளர்ப்பதன் நோக்கத்தினை சிறியவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Drsharmika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe