ADVERTISEMENT

கனவுகள் சொல்ல வருவது என்ன? - ஹிப்னோதெரபிஸ்ட் கபிலன் விளக்கம்

01:16 PM May 20, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

கனவுகள் குறித்த பல புதிய தகவல்களை ஹிப்னோதெரபிஸ்ட் கபிலன் பகிர்ந்துகொள்கிறார்.

டெலிபதி என்பது தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு மனதின் மூலமாக செய்தி அனுப்புவது. நாம் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கும்போது அவரிடமிருந்து நமக்கு அழைப்பு வருவது இதற்கு ஒரு உதாரணம். இது குறித்த ஆராய்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. Precognition என்பது எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயத்தை மேலோட்டமாக முன்கூட்டியே அறிந்துகொள்வது. இது சிலருக்கு கனவுகளாகவும் வரும். எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் முன்கூட்டியே கனவில் வரும். சிலருக்கு அது மிகவும் துல்லியமாக இருக்கும்.

சிலருக்கு ஒருவர் கனவில் வந்தால், அவர் விரைவில் இறந்து விடுவதும் நடக்கும். இது எப்படி நடக்கிறது என்பது பற்றிய சரியான விளக்கங்கள் இல்லை. கனவுகளில் அடுத்து நடக்கப்போகும் நல்ல விஷயங்களும் வரும். நடந்து முடிந்த விஷயங்களும் கனவில் வரும். தூரத்தில் நடக்கும் விஷயத்தை சிலரால் பார்த்து சொல்ல முடியும். தூரத்தில் இருப்பவற்றை உணரவும் முடியும். மனதில் இருப்பதைச் சொல்லும் திறமையும் சிலருக்கு உண்டு.

ஒரு பொருளைத் தொட்டுப் பார்த்தவுடன் அதன் சொந்தக்காரர் பற்றிய அனைத்து தகவல்களையும் சிலரால் சொல்ல முடியும். அந்தக் காலத்தில் சில சட்ட விசாரணைகளுக்கு இவர்களைப் பயன்படுத்திக் கொண்ட சம்பவங்களும் உண்டு. ஈஎஸ்பி பவர் வகைகள் பல உண்டு. ஒருவரை அல்லது இருவரை மட்டுமே அடிக்க முடிந்த ஒரு மனிதரை ஒரே நேரத்தில் 10 பேரை அடிப்பது போல் சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டுகின்றனர். மனம் சம்பந்தப்பட்ட சக்தியிலும் அதுதான் நடக்கிறது. சினிமாவில் இப்படிப்பட்ட சக்தி மிகுந்தவர்களை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர். படத்தில் காட்டும் அளவுக்கு இல்லையென்றாலும் இப்படிப்பட்ட சக்திகள் சிலருக்கு இருப்பது உண்மைதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT