Advertisment

உடல் பருமனுக்கு என்ன காரணம்? - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

What causes obesity? What to do?- Doctor Arunachalam explanation!

'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எண்ணெயில் தாளிப்பது தவறு கிடையாது. ஆனால், எண்ணெயிலே மிதக்க வைத்து சமைப்பது தவறு. படித்த வீடுகளில் செட்டிநாடு குழம்பு தான் வைக்கிறார்கள். ஏனென்றால், குழந்தைகளுக்கு அது மிகவும் பிடிக்கிறது. சமைக்கத் தெரியாத அம்மாக்கள் யூ-டியூப் மூலம் பார்த்துக் கொண்டு நல்ல மாஸ்டராக மாறிவிடுகிறார்கள். என்னைக் கேட்டால் மீஞ்சூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம்தக்கலை வரைக்கும் எந்தக் கல்யாண வீட்டிற்குச் சென்றாலும்கல்யாண வீட்டுச் சாப்பாடு வித்தியாசமாக இல்லை.

Advertisment

எல்லாசமையல் கலைஞர்களும் ஒரே மாதிரியான உணவுக் கலவைகளைப் போட்டுமீன் குழம்பு என்றால் இப்படிதான், மட்டன் குழம்பு என்றால் இப்படிதான், சிக்கன் 65 என்றால் இப்படி தான் என்கிறார்கள். இவை எல்லாமே கொழுப்பு தான் ஆரம்பிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் ஒத்த தயிர் சாதமும்குண்டாக்கும், ஒத்தகுஸ்காவும் குண்டாக்கும். காட்டில் இருக்கக் கூடிய விலங்குகள் தேவைக்கு தான் உணவுகளைச் சாப்பிடுகின்றன. விலங்குகள் சரியான நேரத்தில் சாப்பிடுகின்றன.

Advertisment

வீட்டில் இருப்பவர்களுக்கும், அலுவலகம் சென்று பணிபுரிபவர்களுக்கும் 1,700 கலோரிகள் தான் தேவை. 5,000 கலோரிகளுக்கு மேல் எடுப்பவர்கள் சேர்த்துச் சேர்த்து, உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் சேர்க்க ஆரம்பிக்கிறது. நான் நம்முடைய மூளையை இரண்டாகப் பிரிக்கிறேன். ஒன்று அறிவு, மற்றொன்று பகுத்தறிவு. சாப்பிடு என்று சொல்வது அறிவு.நீ தான் குண்டாக இருக்கியே உனக்கு எதுக்கு சாப்பாடு என்று சொல்வது பகுத்தறிவு. அறிவு மட்டும் தான் நாம் சொன்னதைக் கேட்கும். உணவைக் குறைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் என்னைக்கு வருகிறதோ, அப்போது தான் நாம் உடல் பருமனில் இருந்து மீண்டு வர முடியும்.

உடல் பருமனுக்கு இன்னொரு காரணம்உடற்பயிற்சியின்மை. ஒரு நாளைக்கு நாம் அப் அண்ட் டவுன் நடப்பது மிக அவசியம். உடல் உழைப்பே இல்லாத உணவு தான் நம்மை குண்டாக்கும். நம்மை குண்டாக்குவதன் மூன்றாவது விசயம் ஸ்ட்ரஸ். ஸ்ட்ரஸ்ஸில் சிலருக்குப் பசி அதிகமாக இருக்கும். தூக்கம் வரவில்லை; நன்றாகச் சாப்பிட்டு தூங்கலாம் எனச் சொல்லிட்டு, அந்த மாதிரியான உணவுகளும், ஸ்ட்ரஸ்ஸில் நெகட்டிவ் ஹார்மோன்கள் உண்டாவதால், குறைவாகச் சாப்பிட்டால் கூட சேர்த்து வைக்கக் கூடிய அளவுக்கு சென்று விடும்" எனத் தெரிவித்தார்.

tips health Doctor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe