Advertisment

சிறுநீர் கசிவு எதனால் ஏற்படுகிறது? - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

What Causes Frequent Urine Leakage - Explained by Dr Srikala Prasad

பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்.

Advertisment

சிறுநீர் கசிவு பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை குறித்து வெளியே பேசுவதற்கே அவர்கள் தயங்குவார்கள். சிலரால் சிறுநீரை சில மணி நேரம் கூட அடக்க முடியும். சிலரால் அவ்வாறு அடக்க முடியாது. அவர்களை அறியாமல் அவர்களுக்கு சிறுநீர் வெளியேறிவிடும். இது அவர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். அவசரமாக சிறுநீர் வெளியேறுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மருந்து மாத்திரைகள் மூலமே இதை குணப்படுத்த நாங்கள் முயற்சிப்போம்.

Advertisment

முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நாளாக இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதை ஆராய்வோம். அவர்கள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறார்கள், அதில் அவர்களை அறியாமல் எத்தனை முறை சிறுநீர் வெளியேறுகிறது என்று பார்ப்போம். அவர்களுக்கு தாகமும் பசியும் அதிகம் இருக்கிறதா என்று பார்ப்போம். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படும். சிறுநீரை ஒருவர் சரியாக வெளியேற்றவில்லை என்றாலும், சிறுநீர்ப்பை பிரச்சனை இருந்தாலும், நரம்பு பிரச்சனைகள் இருந்தாலும் சிறுநீர் கசிவு ஏற்படும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அனைத்தையும் நாம் அறிய முடியும். சிறுநீர் கசிவு என்பது ஒரு அறிகுறி தான். அடைப்பு அல்லது நரம்பு பாதிப்புகளால் இந்த பிரச்சனை உண்டாகும். தொற்று காரணமாகவோ, சர்க்கரை நோய் காரணமாகவோ இந்தப் பிரச்சனை ஏற்பட்டதா என்பதை நாங்கள் ஆராய்ச்சி செய்வோம். கர்ப்பப்பை பிரச்சனையால் கூட சிறுநீர் கசிவு என்பது ஏற்படும். இந்தப் பிரச்சனை சரியாக நிறைய மருந்து மாத்திரைகள் இருக்கின்றன.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe