Advertisment

நடிகர்களைப் போல உடலைப் பேண வேண்டுமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Want to maintain your body like an actor? - Explained by Dr. Arunachalam

உடலில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது, டிரை ப்ரூட்ஸ் உண்பது உள்ளிட்டவை குறித்து டாக்டர். அருணாச்சலம் விளக்குகிறார்

Advertisment

நன்றாக குளிப்பதன் மூலமாகவே உடலில் உள்ள கரும்புள்ளிகளை நம்மால் நீக்க முடியும். வியர்வையை நன்கு துடைக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விஜய் சேதுபதி பார்க்க இவ்வளவு நன்றாக இருப்பதற்குக் காரணம் அவர் நிறைய தண்ணீர் குடிப்பதுதான். நடிகைகள் பளபளப்பாக இருப்பதற்கும் அதுதான் காரணம். இயற்கையான காய்கறிகள், பழங்கள், நிறைய தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் கரும்புள்ளிகளைத் தவிர்க்க முடியும். உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

காலையில் நெய்யை உருக்கிக் குடிப்பதால் கொழுப்பு தான் கூடும். அது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. டிரை ப்ரூட்ஸ் & நட்ஸ்சாப்பிடுவதால் குண்டாவதற்கும் வாய்ப்புண்டு. அதன் மூலம் உடலின் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒல்லியாக இருப்பவர்கள் தாங்கள் குண்டாவதில் பிரச்சனை இல்லை என்றால் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அவர்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் இதில் கிடைக்குமா கிடைக்காதா என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.இதில் கலோரிகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சாப்பிட்ட பிறகு பல் துலக்க வேண்டும். பல்லை சுத்தம் செய்யும் சக்தி கேரட்டுக்கும் இருக்கிறது.

drArunachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe